தமிழிஷ் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

தமிழிஷில் பல்வேறு தமிழ் இணைய தளங்களில் இருந்து பக்கங்கள் பகிரப்பட்டாலும் பெரும்பாலான பங்களிப்பு வலைப்பதிவர்களிடம் இருந்தே வருகிறது. எண்ணிக்கையில் ஒப்பிடும் போது தமிழ் இணையதளங்களை விட தமிழில் அதிகம் வலைப்பதிவுகள் உள்ளன. தினமும் புதிதாய் பலர் வலைப்பதிவு துவங்குகின்றனர். சமூக விஷயங்கள், சினிமா, கதை, கட்டுரை, கவிதை, தொழிநுட்பம் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வலைப்பதிவுகள் எழுதப்பட்டு வருகின்றன. அவற்றை அதிக வாசகர் பரப்பிற்கு கொண்டு செல்லும் வேலையை தமிழிஷ் செவ்வனே செய்து வருகிறது. வெற்றிகரமான பல பதிவர்கள் தமிழிஷில் பயனர்களாக இருப்பது மகிழ்வான விஷயம்.

நீண்ட நாட்களாகவே தமிழிஷ், வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் போட்டிகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழிஷ் தளத்தை நிர்வகிக்கும் சுமையுடன் இது போன்ற போட்டிகள் நடத்துவது கூடுதல் சுமையாக அமைந்து விடும் என்ற காரணத்தினாலேயே அதற்கான முயற்சிகள் ஆரம்ப நிலையிலேயே இருந்தன.

இந்நிலையில் தமிழிஷில் அதிகம் கவரப்பட்ட பதிவர்களை அங்கீகரிப்பது முக்கியமானது என்பதனை தமிழிஷ் உணர்ந்தே இருக்கிறது. இதன் துவக்கமாக இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழிஷில் வாசகர்களால் அதிகம் கவரப்பட்ட பதிவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பது என்று முடிவு செய்து உள்ளோம். இந்த ஆண்டு தமிழிஷ் துவங்கியது முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி வரை தமிழிஷில் தங்கள் இடுகைகளை பகிர்ந்த பதிவர்களில் அவர்கள் பெற்ற மதிப்பு மிக்க ஓட்டுக்களின் அடிப்படையில் மூன்று பதிவர்களை தேர்ந்தெடுக்க உள்ளோம்.

இதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.

அடுத்த ஆண்டு முதல் பிரிவு வாரியாக பதிவர்கள் பிரிக்கப்பட்டு மதிப்பு மிக்க ஓட்டுகள் அடிப்படையிலும் , சிறந்த நடுவர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரையின் அடிப்படையிலும் பதிவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்.

பதிவர்கள், வாசகர்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

| icon1 admin | icon2 Uncategorized | icon4 01 14th, 2010| icon3No Comments »

பெயர் (விரும்பினால்): இரா.சிந்தன்
வசிப்பிடம், ஊர் (விரும்பினால்): திருப்பூர்
கல்வித்தகுதி (விரும்பினால்) : பி.எஸ்.சி விசுவல் கம்யூனிகேசன்
தொழில் (விரும்பினால்) : செய்தியாளார், கவிஞன், பேச்சு
ஆண்டு வருமானம் (விரும்பினால்) : —
சாதி பிரிவு (விரும்பினால்): சாதி பேதம் கிடையாது, ஜாதகம் கண்டிப்பாக பார்க்க மாட்டேன்
மதம் (விரும்பினால்) : எதுவுமில்லை
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் (கண்டிப்பாக தெரிவிக்கவேண்டும்): sindhanr@gmail.com
தொடர்புகொள்ளவேண்ய தொலைபேசி எண் (விரும்பினால்): —
படம் (விரும்பினால்) :
மற்ற விபரங்கள் : சமூக அக்கரையுள்ளவரைத் தேடுகிறேன். ஒருவருக்கு அடங்கி வாழும் எண்ணம் உள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டாம். (அவசரமில்லை

| icon1 admin | icon2 Uncategorized | icon4 01 8th, 2010| icon3Comments Off

நாள்தோறும் பெருகி கொண்டு இருக்கும் தமிழிஷ் பயனர்களுக்கு வணக்கங்கள். பயனர்கள் எண்ணிக்கை போன்றே தமிழிஷில் பகிரப்பட்டு வரும் இடுகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பகிரப்படும் இடுகைகளை பயனர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அணுக வகைப்படுத்தி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கி வருகிறோம். சூடான செய்திகள் என்ற பெயரில் செய்தி தளங்களில் இருந்து பகிரப்படும் இடுகைகளை தனியே வகைப்படுத்தி பட்டியலிட்டோம். உங்களிடம் அது மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக சோதனை முயற்சியில் புதிய பகுதியை அறிமுகப்படுத்துகிறோம்.

இணைய உலகில் ஒவ்வொரு கால கட்டத்திலும் சில விஷயங்கள் முக்கியத்துவம் கொடுத்து அலசப்படுகின்றன. வலைப்பதிவர்களும் குறிப்பிட்ட விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் எழுதி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் அரசியல் விஷயங்கள் பரபரப்பாக தேடப்படுகிறது, எழுதப்படுகிறது. திரைப்படங்கள் வெளியாகும் கால கட்டங்களில் அத்திரைப்படம் குறித்த விஷயங்கள் பரபரப்பாக தேடப்படுகிறது, எழுதப்படுகிறது. அந்தந்த கால கட்டத்தில் பரபரப்பாக உள்ள விசயங்களை தமிழிஷ் பயனர்களும் தமிழிஷில் தேடி வாசிக்கின்றனர். தமிழிஷில் பகிரப்படும் இடுகைகளின் சதவீதத்தில் பரபரப்பாக உள்ள விசயங்களில் உள்ளடக்கிய இடுகைகளும் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன.

இதனையொட்டி ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழிஷில் அதிகம் தேடி வாசிக்கப்படும், இணையத்தில் அதிகம் எழுதப்படும் விஷயங்களை உள்ளடக்கிய இடுகைகளை தனியே பிரித்து காட்டுவது என்று முடிவு செய்து உள்ளோம். இதனால் அந்தந்த நேரத்தில் பரபரப்பாக உள்ள விசயங்களை தமிழிஷ் பயனர்கள் எளிதில் வாசித்து கொள்ள முடியும்.

தமிழிஷ் சூடான சங்கதி!. இது ஒரு சோதனை முயற்சி.

தற்போது வேட்டைக்காரன் திரைப்படம் குறித்து அதிக இடுகைகள் பகிரப்படுகின்றன. பயனர்களாலும் வாசிக்கப்படுகின்றன. புதிய பகுதியின் ஆரம்பமாக வேட்டைக்காரன் திரைப்படம் தொடர்பாக பகிரப்படும் இடுகைகள் தனியே பிரித்து பட்டியலிடப்படும்.

சுட்டி : http://www.tamilish.com/special

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பரபப்பாக எழுதப்படும் விஷயங்களை உள்ளடக்கிய இடுகைகள், தமிழிஷ் சூடான சங்கதி! பகுதியில் பட்டியலிடப்படும். இது தமிழிஷ் பயனர்களை கவரும் என்று நம்புகிறோம்.

இது குறித்த உங்கள் கருத்துக்களை support@tamilish.com என்ற முகவரிக்கு மின் மடலிடவும்.

நன்றி.

| icon1 admin | icon2 Uncategorized | icon4 12 17th, 2009| icon3No Comments »

வலைப்பதிவுகளில் வில்லங்க மென்பொருள்கள் (malicious software) பரவுவது தொடர்பாக பயனர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். சிலர் தமிழிஷ் மூலம் வில்லங்க மென்பொருள்கள் பரவுகிறதா? என்று சந்தேகமும் எழுப்பி உள்ளனர்.

இணையத்தில் பிரபல தளங்களை குறிவைத்து தாக்கி அவற்றின் பாதுகாப்பை உடைத்து அதன் மூலம் பயனர்களுக்கு வில்லங்க மென்பொருளை பரப்புவது பரவலாக நடந்து வருகிறது. இதனை எப்போதும் கவனத்தில் கொண்டு கண்காணிப்புடன் தமிழிஷ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழிஷ் தளத்தால் சில வலைப்பதிவுகளில் வில்லங்க மென்பொருள்கள் பரப்ப படுவதாக கூகிள் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தமிழிஷ் பயனர்கள் தகுந்த நேரத்தில் எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். உடனடியாக தமிழிஷ் தளத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டு, தமிழிஷ் தளம் முற்றிலும் சோதிக்கப்பட்டது. எவ்வித வில்லங்க மென்பொருள்களுக்கான பாதிப்புகளும் தளத்தில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இணைய பாதுகாப்பு துறையில் பரிட்சயம் உள்ள சில வல்லுனர்களை கொண்டு மீண்டும் சோதிக்கப்பட்டு, தளத்தின் பாதுகாப்பு மேலும் உன்னதப்படுத்தப்பட்டது.

இந்த எச்சரிக்கை செய்தி தொடர்பாக கூகுள் நிறுவனத்தையும் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இந்நிலையில் தமிழிஷ் தளத்தை நாங்கள் கவனத்துடன் கண்காணித்து வருகிறோம். தமிழிஷில் எவ்வித வில்லங்க மென்பொருள்களுக்கான பாதிப்பும் இல்லை என்று உறுதியுடன் தெரிவித்து கொள்ளுகிறோம். எதிர்காலத்தில் வில்லங்க மென்பொருள்களால் தமிழிஷ் தளத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அறியப்படும் அந்த வினாடியே, தமிழிஷ் தளத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படும். வில்லங்க மென்பொருள்களை நீக்கி பயனருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி செய்த பின்னரே தளம் செயல்பாடுகள் மீண்டும் துவங்கும் என்று உறுதி கூறுகிறோம்.

இந்த சூழ்நிலையில் தமிழிஷ் பயனர்களுக்கு சில வேண்டுகோள்களை வைக்கிறோம்.

தமிழிசை பொறுத்தவரை தளங்களுக்கு வழங்கப்படும் ஓட்டளிப்பு பட்டை தளங்களை வாசிப்போர் தமிழிஷில் அந்த தளத்தினை தேடி ஓட்டளிப்பதற்கு பதிலாக அங்கேயே ஓட்டளிக்கும் வண்ணம் உபரி வசதியாகவே வழங்கப்படுகிறது. ஓட்டளிப்பு பட்டை காட்டாய தேவை கிடையாது. ஓட்டளிப்பு பட்டை தேவை இல்லை என்று நினைப்பவர்கள் அவற்றை நீக்கி கொள்ளலாம். அதற்கும் இடுகைகளை தமிழிஷில் இணைப்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

நீங்கள் பகிருகின்ற தளம் வில்லங்க மென்பொருள்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் தமிழிஷில் பகிர வேண்டாம். அவை தமிழிஷில் பகிரப்படும் பட்சத்தில், தமிழிஷ் தளத்தில் இருந்து வில்லங்க மென்பொருள் உள்ள தளத்திற்கு சுட்டி அளிப்பதால் தமிழிஷ் தளமும் பாதுகாப்பற்ற தளமாக கூகிள் போன்ற தேடு எந்திரங்கள் மூலம் கருதப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே வில்லங்க மென்பொருள்கள் உள்ள தளத்திற்கான சுட்டி தமிழிஷ் தளத்தில் காண நேரிட்டால், பயனர்கள் தயவு செய்து support@tamilish.com என்ற முகவரியில் தெரிவிக்கவும். அந்த தளங்களில் இருந்து தமிழிஷில் பகிர்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்படும். அந்த தளங்கள் வில்லங்க மென்பொருள்களை நீக்கிய பின் தடை விலக்கப்படும்.

பயனர்கள் தமிழிஷ் தளத்தை உபயோகிக்கும் போது / திறக்கும் போது வில்லங்க மென்பொருள்கள், வைரஸ் அறிவிப்புகள் பெற்றால் உடனடியாக support@tamilish.com என்ற முகவரிக்கு தெரிவிக்கவும். உடனடி நடவடிக்கை எடுக்க அது மிகவும் உதவும்.

இந்த தருணத்தில் சரியான நேரத்தில் இந்த விஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த பதிவர் நைஜீரியா ராகவன், பதிவர் கிரி, பதிவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்ளுகிறோம்.

இதுபோன்ற வில்லங்க மென்பொருட்களால் பாதிக்கப்பட்ட கூகிள் வலைப்பதிவுகளை மீட்பது குறித்து விரிவான விளக்கம் கூகிள் இணைய தளத்தின் உதவி பக்கங்களில் உள்ளது. கூகிள் நிறுவனத்தின் தானியங்கி சோதனை இயங்கிகளும் சில சமயம் தவறு செய்வது உண்டு. இதனை கூகிள் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது. அவ்வாறு நடந்தால், கூகிள் நிறுவனத்தை உங்கள் வலைப்பதிவின் மூலம் தொடர்புகொண்டால், உங்கள் வலைப்பதிவை மீட்டெடுக்க ஆவன செய்வார்கள். இது குறித்து மேலும் விளக்கம் தேவை என்றால் எங்களை தனிமடலில் தொடர்புகொள்ளவும்.

இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள். மேலும் விளக்கங்கள், உதவிகள் தேவைப்பட்டால் support@tamilish.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம்.

| icon1 admin | icon2 Uncategorized | icon4 12 2nd, 2009| icon3Comments Off

தமிழிஷ் பயனர் ஒருவரின் வேண்டுகோளின்படி, இந்த அறிவிப்பு தமிழ் பதிப்பகங்களுக்கு. தமிழ் பதிப்பகங்கள், தங்களது புத்தக வெளியீட்டு விழா, புதிய புத்தகங்கள் பற்றிய அறிவிப்புகள் ஆகியவற்றை தமிழிஷ் அறிவிப்பு பகுதியில் இலவசமாக வெளியிடலாம்.

மேற்கண்ட தகவல்களை எங்களுக்கு மின் அஞ்சலில் அளித்தால் தமிழிஷ் வலைப்பதிவு அறிவிப்பு பகுதியில் வெளியிட்டு, முகப்பு பகுதியில் நிறுத்துவோம். இந்த வாய்ப்பை தமிழ் பதிப்பகங்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

உங்கள் தகவல்கள் வந்துசேரவேண்டிய மின் அஞ்சல் support@tamilish.com

——x——

தமிழிஷ் பேஸ்புக் http://www.facebook.com/profile.php?id=100000171041009&ref=profile
தமிழிஷ் ஆர்குட் இணைய குழுமம் http://www.orkut.com/Main#Community?cmm=93538350
தமிழிஷ் சூடான செய்திகள் ட்விட்டரில் http://twitter.com/tamilishseithi
அலெக்ஸா தரவரிசை http://www.alexa.com/siteinfo/tamilish.com
தமிழிஷ் கூகிள் சானல் http://labs.google.co.in/smschannels/subscribe/TamilishTamilHotNews
தமிழிஷ் அலைபேசி இணைய தள சுட்டி : http://m.tamilish.com
தமிழிஷ் தளத்தில் விளம்பரம் செய்ய advt@tamilish.com
தமிழிஷ் தளத்தை தொடர்புகொள்ள support@tamilish.com

| icon1 admin | icon2 Uncategorized | icon4 11 27th, 2009| icon3Comments Off

நீங்கள் தமிழிஷ் இணைய தளத்தில் பதிவுகளை சேர்க்கும் பதிவராக இருக்கலாம். அல்லது தமிழிஷ் தளத்தில் மற்ற பிரபல இணைய தளங்களின் சுட்டிகளை இணைக்கும் பயனராக இருக்கலாம். அல்லது தமிழிஷை தினம் பயன்படுத்தும், தோழமைகளுக்கு பரிந்துரைக்கும், நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து வாக்களிக்கும், சிறந்த வாசகராக இருக்கலாம். உங்கள் அனைவருக்குமான போட்டி அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கலந்துகொள்ளும் ஒருவருக்கு இந்திய ரூபாய் 10,000 பரிசு பணமாக அளிக்கப்படும். போட்டியில் கலந்துகொள்ளும் மற்ற அனைவருக்கும் பதக்கம், புத்தகங்கள் அளிக்கப்படும். விரைவில் போட்டி பற்றிய விதிமுறைகளை, விரிவான அறிவிப்பை இதே அறிவிப்பு பகுதியில் எதிர்பாருங்கள்.

தொடரும் உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றிகள் பல.

தமிழிஷ்.
தமிழின் முதன்மை இணைய திரட்டி..இணையத்தில் தமிழர்களின் முகவரி..

_/\_

தமிழிஷ் பேஸ்புக் http://www.facebook.com/profile.php?id=100000171041009&ref=profile
தமிழிஷ் ஆர்குட் இணைய குழுமம் http://www.orkut.com/Main#Community?cmm=93538350
தமிழிஷ் சூடான செய்திகள் ட்விட்டரில் http://twitter.com/tamilishseithi
அலெக்ஸா தரவரிசை http://www.alexa.com/siteinfo/tamilish.com
தமிழிஷ் கூகிள் சானல் http://labs.google.co.in/smschannels/subscribe/TamilishTamilHotNews
தமிழிஷ் அலைபேசி இணைய தள சுட்டி : http://m.tamilish.com
தமிழிஷ் தளத்தில் விளம்பரம் செய்ய advt@tamilish.com
தமிழிஷ் தளத்தை தொடர்புகொள்ள support@tamilish.com

| icon1 admin | icon2 Uncategorized | icon4 11 18th, 2009| icon3Comments Off

சென்னை பதிவர் சந்திப்பு –07/11/09

நாள் : 07/11/09
இடம் : Discovery Book Palace
No. 6. Mahaveer Complex
1st Floor, Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78
Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்

பாலபாரதி: 9940203132
கேபிள் சங்கர் :9840332666
தண்டோரா :9340089989
நர்சிம் :9841888663
அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010
முரளிகண்ணன் :9444884964

தமிழிஷ் வாசகர்கள், பதிவர்கள் இயன்றால் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும்.

| icon1 admin | icon2 Uncategorized | icon4 11 6th, 2009| icon3Comments Off

ஓபரா இணைய உலாவியில் தமிழை கொண்டுவருவதில் பிரச்சினை ஏற்படுவதாக தமிழிஷ் பயனர்களிடம் இருந்து மின் அஞ்சல் கிடைக்கப்பெற்றோம்.

Step 1:

உங்கள் அலைபேசியில் ஓபெரா உலாவி இல்லை எனில் அதனை தரவிறக்கம் செய்ய சுட்டி http://www.opera.com/mini/

Step 2:

ஓபரா உலாவியை உங்கள் அலைபேசியில் நிறுவிய பின் அதன் அட்ரஸ் பாரில் oprea:config என்று எழுதி இயக்கவும். (அலைபேசியில் இருந்து ஒரு இணைய தளத்துக்கு செல்வது போல செய்யவும்)

Step 3:

இப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் use bitmap fonts for complex scripts என்ற வாய்ப்பில் (மூன்றாவதாக இதனை பார்க்கலாம்) ஆம் என்று கொடுத்து சேமிக்கவும்.

இனி உங்கள் ஓபெரா உலாவி மூடி திறக்கும் (restart). இல்லை எனில் நீங்களே மூடி திறக்கவும்.

இப்போது உங்கள் உலாவி தமிழிஷ் தளத்தை பார்க்க தயாராகிவிட்டது. http://m.tamilish.com என்ற சுட்டிக்கு செல்லவும். தமிழிஷ், உங்கள் அலைபேசிக்கு தகுந்தபடி மாற்றப்பட்டு, காட்சியளிக்கும்.

தமிழிஷ் பேஸ்புக் http://www.facebook.com/profile.php?id=100000171041009&ref=profile
தமிழிஷ் ஆர்குட் இணைய குழுமம் http://www.orkut.com/Main#Community?cmm=93538350
தமிழிஷ் சூடான செய்திகள் ட்விட்டரில் http://twitter.com/tamilishseithi
அலெக்ஸா தரவரிசை http://www.alexa.com/siteinfo/tamilish.com
தமிழிஷ் கூகிள் சானல் http://labs.google.co.in/smschannels/subscribe/TamilishTamilHotNews
தமிழிஷ் அலைபேசி இணைய தள சுட்டி : http://m.tamilish.com
தமிழிஷ் தளத்தில் விளம்பரம் செய்ய advt@tamilish.com
தமிழிஷ் தளத்தை தொடர்புகொள்ள support@tamilish.com

| icon1 admin | icon2 Uncategorized | icon4 11 4th, 2009| icon3Comments Off

பெயர் : வினோத்
வசிப்பிடம், ஊர் : தற்போது UAE இல் பணிபுரிகிறார். புதுவையை சேர்ந்தவர்.
கல்வித்தகுதி : முதுநிலை கல்வி (M.E)
தொழில் :Quality Engineer
மதம் : இந்து
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் : vin.gowtham@gmail.com
மற்ற விபரங்கள் :
தற்பொழுது UAE இல் பணிபுரிந்தாலும், இந்தியாவை நேசிப்பதால், திரும்ப விரும்புகிறார்.

தமிழிஷ் வினோத் அவர்களை நெஞ்சார பாராட்டுவதுடன், அவருக்கு இனிய துணை அமைய வாழ்த்துகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்க தமிழிஷை தொடர்புகொள்ள support@tamilish.com
தொடர்புடைய சுட்டி : http://blog.tamilish.com/pakkam/91

| icon1 admin | icon2 Uncategorized | icon4 10 31st, 2009| icon3Comments Off

தமிழ் வலையுலகில் தவிர்க்கமுடியாத திரட்டியான தமிழிஷ், சமூக தளத்தில் பெரும் சாபக்கேடான வரதட்சணையை எதிர்த்து களமிறங்குகிறது. சமீபத்தில் தமிழிஷ் தளத்திற்கு மின் அஞ்சல் இட்டிருந்த வாசகர் ஒருவர், வரதட்சணை கொடுக்காத மற்றும் வாங்காத வரன்களின் விபரங்களை தமிழிஷ் தளத்தில் முகப்பு பக்கத்தில் வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, அவ்வாறு செயல்படவிருக்கின்றோம்.

வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ விரும்பாத, விருப்பமில்லாதவர்கள், தங்களது தகவல்கள், நிழல்படம், மின் அஞ்சல், தொலைபேசி எண் போன்றவற்றை எங்களுக்கு அளித்தால், அதனை எங்களது தளத்தில் வெளியிட்டு பெருமையடைய விரும்புகிறோம். கீழ்காணும் வகையில் தகவல்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டுகிறோம். அளிக்க விரும்பாத தகவல்களை விட்டுவிட்டு, அளிக்க விரும்பும் தகவல்களை மட்டுமே அளிக்கவும்.

வரதட்சணை கொடுக்கமாட்டேன் / மணமகள்:

பெயர் (விரும்பினால்):
வசிப்பிடம், ஊர் (விரும்பினால்):
கல்வித்தகுதி (விரும்பினால்) :
தொழில் (விரும்பினால்) :
ஆண்டு வருமானம் (விரும்பினால்) :
சாதி பிரிவு (விரும்பினால்):
மதம் (விரும்பினால்) :
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் (கண்டிப்பாக தெரிவிக்கவேண்டும்):
தொடர்புகொள்ளவேண்ய தொலைபேசி எண் (விரும்பினால்):
படம் (விரும்பினால்) :
மற்ற விபரங்கள் :

வரதட்சணை வாங்கமாட்டேன் / மணமகன்:

பெயர் (விரும்பினால்):
வசிப்பிடம், ஊர் (விரும்பினால்):
கல்வித்தகுதி (விரும்பினால்) :
தொழில் (விரும்பினால்) :
ஆண்டு வருமானம் (விரும்பினால்) :
சாதி பிரிவு (விரும்பினால்):
மதம் (விரும்பினால்) :
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் (கண்டிப்பாக தெரிவிக்கவேண்டும்):
தொடர்புகொள்ளவேண்ய தொலைபேசி எண் (விரும்பினால்):
படம் (விரும்பினால்) :
மற்ற விபரங்கள் :

மற்ற விபரங்கள் என்ற பகுதியில் விவாகரத்து, மருத்துவ பிரச்சினைகள், உடல் குறைபாடு போன்ற தகவல்களை தெரிவிக்கலாம். தகவல்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி support@tamilish.com

| icon1 admin | icon2 Uncategorized | icon4 10 27th, 2009| icon3Comments Off

« Previous Entries