பல்வேறு தகவல்களை கதம்ப மாலையாகத்தரும் தமிழிஷ் தளத்தை தவறாமல் தினமும் பார்வையிடும் பல ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு எங்களது சிறப்பு வணக்கங்கள். உங்கள் அனைவரின் அன்பான ஆதரவின்றி எங்களது இலக்குகளை எட்டியிருக்க முடியாது.

தினமும் தங்களது சிறப்பான இடுகைகளின் மூலம் தமிழிஷ் தளத்தினை சுவாரஸ்யமாக்கிவரும் எமது தளத்தின் வலைப்பதிவர்களுக்கும் எமது அன்பான நன்றிகளும் வணக்கங்களும்..

உங்களது அன்பான ஆதரவினால் மட்டுமே தமிழ் வலைத்தளங்களில் தவிர்க்க முடியாத தளமாக தமிழிஷ் மாறி உள்ளது.

உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் தமிழிஷ் குழுவினரின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தினமும் பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் பார்வையிடும் தமிழிஷ், இந்த நேரத்தில் விளம்பரங்களை வரவேற்கிறது. உங்களது தொழில்கள், பொருட்கள் குறித்த அறிவிப்புகள், செய்திகள் தினமும் பல்லாயிரக்கணக்கானவர்களால் பார்வையிடப்படவேண்டுமா ? உலகின் பல்வேறு நாடுகளில் எல்லாம் பரந்து விரிந்து வாழும் தமிழர்களிடம் உங்கள் விளம்பரங்கள் விரைவில் சென்றடைந்திடவேண்டுமா ?

எங்களது இணைய தளத்தில் விளம்பரம் செய்து பயனடையுங்கள். விளம்பரதாரர்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டு, எங்களது இணையதளத்தில் ஆகக்குறைந்த செலவில் (மாதம் ரூ 2500 முதல்) விளம்பரம் செய்யலாம். விளம்பரம் செய்ய விரும்பும் விளம்பரதாரர்கள், எங்களது குழுவினரை advt@tamilish.com என்ற மின் அஞ்சலில் தொடர்புகொண்டால், முழு விவரங்கள் அளிக்கப்படும்.

| icon1 admin | icon2 Uncategorized | icon4 08 17th, 2009| icon3No Comments »

தமிழிஷில் பகிரப்படும் அன்றாடச் செய்திகளை முன்னிலைப்படுத்தி பார்வையாளர்களுக்கு அளிக்கும் விதமாக பல்வேறு சோதனை முயற்சிகளுக்குப் பிறகு “சூடான செய்திகள்” என்ற தலைப்பில் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளோம். தினந்தோறும் பகிரப்படும் செய்திகள் இதன் கீழ் பட்டியலிடப்படும். இது தமிழிஷ் பார்வையாளர்களிடையே வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்.

அண்மைய சூடான செய்திகளை இந்த சுட்டியில் http://www.tamilish.com/seithigal காணலாம். இதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் பகிரப்பட்ட சூடான செய்திகளை இந்த சுட்டியில் http://www.tamilish.com/seithigal/today வாக்கின் அடிப்படையில் காணலாம்.

சூடான செய்திகளுக்கான RSS செய்தியோடை – http://www.tamilish.com/rss/special/seithigal
சூடான செய்திகளை டிவிட்டரில் பின்தொடர  – https://twitter.com/tamilishseithi

எரித (Spam) இடுகைகளை கட்டுப்படுத்துவதில் மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளோம். இதற்கென தனியே தமிழிஷில் எரிதக் களைப்பான்(Spam Filter) நிறுவப்பட்டு உள்ளது.  பகிரப்படும் பெரும்பாலான இடுகைகள் தானாகவே  தொடரும் இடுகைகள் பகுதிக்கு வந்து விடுகின்றன. எரிதம்(Spam) எனும் சந்தேகத்திற்கு உரிய இடுகைகளை எரிதக் களைப்பான்(Spam Filter) நிறுத்தி வைத்து விடும். அவை தமிழிஷ் குழுவினர் பார்வையிட்ட பிறகு அதிகபட்சம் 24 மணி நேரத்தில் அனுமதிக்க பட்டுவிடும்.

தற்சமயம் இடுகைகளை பகிர்வோர் ஒரே தளத்தில் இருந்து ஒன்றிற்கு மேற்பட்ட இடுகைகளை பகிரும் பொழுது முப்பது நிமிட கால இடைவெளியில் பகிரும்படி கேட்டு கொள்ளுகிறோம்.

மேலும் சந்தேகங்கள் ஏதுமிருப்பின், விளக்கங்கள் தேவைப்பட்டால் support@tamilish.com என்ற முகவரிக்கு மின்மடலிடவும்.

நன்றி

தமிழிஷ் நிர்வாகம்

| icon1 admin | icon2 Uncategorized | icon4 08 12th, 2009| icon31 Comment »

தொடரும் இடுகைகள் பகுதியில்   ஆங்கில,  விளம்பர , ஸ்பாம் (SPAM) , ஆபாச  இடுகைகள், ஒரே உள்ளடக்கம் உள்ள செய்திகள்  அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பயனர்கள் தொடரும் இடுகைகள் பகுதியில் இடுகைகளை வாசிப்பது குறைந்து வருகிறது. தமிழிஷ் பயனர்களின் நீண்ட நாளைய கோரிக்கையின் படி தொடரும் இடுகைகள் பகுதியை செம்மைப்படுத்துவது முக்கியமாகிறது.

தொடரும் இடுகைகள் பகுதியில் தானியங்கி (Bot) நிரல்கள் மூலம் ஆங்கில ஸ்பாம் (Spam) இடுகைகள் பகிர்வது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு தொழில்நுட்ப ரீதியில் காணும் வரையில் ,  பயனர்களால் பகிரப்படும் இடுகைகள் தமிழிஷ் குழுவினர் பார்வையிட்ட பின்னரே தொடரும் இடுகைகள் பகுதியில் பட்டியலிடப்படும். தவறான நோக்கத்தில் பகிரப்பட்ட இடுகைகள் நீக்கப்படும்.

“பார்வையிட்ட பின்பு” என்பது ஆங்கில , ஆபாச , விளம்பர,  ஒரே செய்தி இடுகைகளை பார்த்த உடனே கண்டு கொள்ளலாம். அனைத்து இடுகைகளையும் படித்து கருத்துகளை புரிந்து மட்டுறுத்துவது என்பது நடைமுறையில் இயலாத காரியம். தவறான  இடுகைகள் நீங்கள் காண நேரிட்டால் service@tamilish.com என்ற முகவரியில் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கவும். உங்கள் புகார் கவனத்தில் கொள்ளப்படும்.

தவறான இடுகைகளுக்கு சில எடுத்துகாட்டுகள்

1. தானியங்கி (Bot ) நிரல்கள் மூலம் பகிரப்படுபவை
2. தமிழ் பகுதியில் பகிரப்படும் ஆங்கில இடுகைகள்
3. ஒரே உள்ளடக்கம் கொண்ட இணைய பக்கங்கள் (Duplicate Content)
4. ஆபாச இடுகைகள்
5. விளம்பர நோக்கில் பகிரப்படும் இடுகைகள்
6. வேலை செய்யாத இணைப்பு (Invalid URL) உள்ள இடுகைகள்
7. வர்த்தகரீதியிலான பக்கங்களை கொண்ட இடுகைகள்

செய்தி தளங்களில் இருந்து ஒரே செய்திகள் , ஒரே விதத்தில் எழுதப்பட்ட செய்திகள் பகிரப்படுகின்றன. செய்திகளை பகிரும் போது அவை ஏற்கனவே தமிழிஷில் பகிரப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்த பின் பகிரவும். ஏற்கனவே இருந்தால் பகிர வேண்டாம். ஒன்றிற்கும் மேற்பட்ட ஒரே செய்திகள் பகிரப்படும் போது முதன் முதலில் பகிர்ந்த செய்தி இடுகை எதுவோ அது மட்டுமே தொடரும் இடுகைகளில் பட்டியலிடப்படும்.

பல செய்தி தளங்களில் இருந்து பகிரும் போது அனைத்து செய்திகளையும் பகிராமல் முக்கிய செய்திகள், சிறப்பு செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள் உள்ளிட்ட முக்கியமானவற்றை பகிரவும். ஒட்டு மொத்தமாக செய்திகளை பகிரும் போது அவை  தமிழிஷ் வாசகர்களால் புறக்கணிக்க படுகிறது. அதே சமயம்  மற்ற பயனர் இடுகைகளின் முன்னுரிமை பாதிக்க படுகிறது. குறிப்பிட்ட முக்கிய செய்திகளை பகிரும் போது அவை அதிகம் வரவேற்பு பெறும்  என்று நம்புகிறோம்.

மேலும் நீங்கள் பகிரும் இடுகைகள் தமிழிஷ் விதிமுறைகளை மீறாத வண்ணம் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.  இது மட்டுமன்றி எந்த ஒரு இடுகையையும் அனுமதிக்கும் / நிராகரிக்கும் முழு உரிமை தமிழிஷுக்கு உண்டு.

பகிரப்படும் இடுகைகள் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் தொடரும் இடுகைகள் பகுதியில் பட்டியலிடப்படும். தொழில்நுட்ப ரீதியாக நிரந்தர தீர்வு காணும் வரை இந்த முறை தொடரும்.

தவறான நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஸ்பாம்(Spam) பயனர் கணக்குகள் தற்போது நீக்கப்பட்டு வருகின்றன. உங்களுடைய கணக்கு தவறுதலாக நீக்கப்பட்டதாக அறிந்தால் உடனே service@tamilish.com முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

பயனர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறோம். உங்களுடைய கருத்துகள் , விளக்கங்கள் , ஆலோசனைகளை support@tamilish.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும்.

மேலும் பல புதிய பகுதிகள், வசதிகள் தமிழிஷில் அறிமுகபடுத்த பட உள்ளன என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி

- தமிழிஷ் நிர்வாகம்

| icon1 admin | icon2 Uncategorized | icon4 08 4th, 2009| icon3Comments Off

தமிழிஷில்(tamilish.com) இணைக்கப்படும் பதிவுகளின் காப்புரிமை பற்றி குறித்து விளக்கம் அளிப்பது அவசியம் ஆகிறது. தமிழிஷில் நீங்கள் அளிக்கும் இடுகையில் இணைக்கும் பக்கம் (External Web Link) பற்றிய விளக்கத்தை , மறுமொழியை பயனர் தெரிவித்ததாக  உபயோகிக்கும் உரிமை தமிழிசுககு(tamilish.com)   உண்டு.

பயனர் அளிக்கும் தகவல்கள்/ கருத்துகளை Tamilish.com, http://feeds2.feedburner.com/tamilish-popular, http://www.twitter.com/tamilish போன்ற இடங்களின் உபயோகித்து வருகிறோம்.

தமிழிஷில்(tamilish.com)  அளிக்கும் RSS செய்தி ஓடைகளை பல்வேறு தளங்களும் உபயோகித்து வருகின்றன.

இணைக்கிற இணைப்பு (External Web Link) களில் உள்ள ஆக்கங்களுக்கும் தமிழிசுக்கும்(Tamilish.com) எவ்வித தொடர்போ அல்லது உரிமையோ கிடையாது. அது அந்தந்த தள உரிமையாளர்களின் காப்புரிமை சம்பந்தப்பட்டது. சுருங்க சொல்ல வேண்டும் என்றால் Tamilish – இல் தோன்றுகின்ற எழுத்துகளுக்கு தான் உபயோகபடுத்தும் உரிமையே தவிர அங்கு இடப்பட்டுள்ள External Link -இல் உள்ள எழுத்துகளுக்கு தமிழிஷ்((tamilish.com) -க்கு எந்த உரிமையும் கிடையாது.

தமிழிஷில்(tamilish.com) இடுகை இடுவோர் இணைக்கப்படும் பக்கம் பற்றி விளக்கம் (Description) அளிக்கும் போது அந்த பக்கம் பற்றி உங்கள் சிறிய விமர்சனத்தை அளியுங்கள். அவை உங்கள் சொந்த கருத்தாக உங்கள் உரிமைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இணைக்கும் இணைய பக்கத்திலிருந்து ஆக்கத்தின் உரிமையாளர் அனுமதி இன்றி வெட்டி ஓட்டுவதை தவிருங்கள். நீங்கள் அளிக்கும் மறுமொழிகளும் உங்கள் சொந்த கருத்தாக உங்கள் உரிமைக்கு உட்பட்டதாக  இருக்க வேண்டும்.

தள உரிமையாளர்கள், வலைப்பதிவர்கள் (Bloggers) தங்கள் ஆக்கங்கள் தங்கள் அனுமதியின்றி தமிழிஷில்(tamilish.com) வெளியிடப்படுவதாக கருதினால் , அதை நீங்கள் விரும்பவில்லை எனில்
info@tamilish.com என்ற முகவரிக்கு புகார்  மின் அஞ்சல் அனுப்பவும்.  அந்த இடுகைகள் விரைவில் நீக்கப்படும். தமிழிஷ்((tamilish.com) பயனர் அந்த தவறை தொடர்ந்து தொடர்ந்து செய்யும் போது அந்த பயனரின் உறுப்பினர் கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும். தள உரிமையாளர்கள், வலைப்பதிவர்கள் (Bloggers) தங்கள் இணைய பக்கங்கள்  எப்பொழுதும் தமிழிஷில்(tamilish.com)  பகிரப்படுவதற்கு நிரந்தர தடை தடை விதிக்க விரும்பினால் அவரது கோரிக்கையை ஏற்று அந்த தளங்கள் தமிழிஷில்(tamilish.com) பகிரப்படுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும்.

மேலும் தமிழிஷ்(tamilish.com) மற்ற தள உரிமையாளர்கள், வலைப்பதிவர்கள் (Bloggers) காப்புரிமையை  பாதிக்கும் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாது என்று தெரிவித்து கொள்கிறோம்.

தமிழிஷ்(tamilish.com) விதிமுறைகள் பற்றி நீங்கள்  இந்த இணைப்பில் http://www.tamilish.com/terms தெரிந்து கொள்ளலாம். விதிமுறைகளில் மாற்றம் ஏதேனும் செய்தால் அறிவிப்பு வெளியிடுவோம்.

இது தொடர்பாக மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் info@tamilish.com க்கு மின் அஞ்சல் அனுப்பவும்

- தமிழிஷ்(Tamilish.com) நிர்வாகம்

| icon1 admin | icon2 Uncategorized | icon4 08 4th, 2009| icon3Comments Off

ஓட்டுகள் / பதிவுகள் முகப்பு பக்கம் செல்வது பற்றி தொடர்ச்சியாக இமெயில்கள் வந்தவண்ணம் உள்ளதால், அதை விளக்க வேண்டியது அவசியமாகிறது.

பகிர்பவர்கள்  கேட்கும் சில முக்கியமான கேள்விகள்

கேள்வி : “நான்கு ஓட்டு வாங்கிய பதிவு பாப்புலர் பகுதிக்கு சென்று விட்டது. எனது பதிவு ஏழு ஓட்டுகள் பெற்றும், Upcoming பகுதியிலேயே உள்ளது. ” ஏன்?

ஓட்டு அடிப்படையில் செயல்படும் போது பல விஷயங்கள் கருத்தில் எடுத்து கொள்ள படுகின்றன. அனைத்து வாசகர்கள் அளிக்கும் ஓட்டுகளுக்கும் ஒரே மதிப்பு கிடையாது.

வாசகரின் பங்களிப்பை பொறுத்து அவர் அளிக்கும் வாக்கின் தரமும் / மதிப்பும் தானாக நிர்ணயிக்க படுகிறது.

எடுத்துகாட்டாக

தமிழிஷில் ஒவ்வொரு பதிவாக படித்து முக்கிய /  கவர்ந்த  பதிவுகளை தேர்ந்தெடுத்து ஓட்டளிக்கும் வாசகருக்கும்,

ஓட்டளிக்க மட்டும் தமிழிசுக்கு வருகை தரும் வாசகர்களுக்கும்  / குழுவாக செயல்பட்டு தங்களுக்குள் தங்கள் பதிவுகளுக்கு ஓட்டளித்து கொள்ளும் வாசகர்களுக்கும் /

பதிவுகளை முழுதும் வாசிக்காமல் கண்மூடித்தனமாக ஓட்டளிக்கும் வாசகர்களுக்கும் , அவர்களது ஓட்டுகளுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

இருவர் அளிக்கும் வாக்குகளுக்கும் ஒரே அளவு மதிப்பு கொடுக்க முடியாது.

‘மதிப்புமிக்க’ வாசகர்களை பிரித்தெடுப்பதில் நாங்கள் பல நிலைகள் வைத்துள்ளோம். அவர்கள் ஓட்டுகளுக்கு மதிப்பு அதிகம்.

எப்படி ‘மதிப்புமிக்க’ வாசகர்களை பிரிக்கிறோம்?

1. அவர் தினசரி தமிழிஷை பார்வை இடுகிறாரா?
2. எத்தனை  பதிவுகளுக்கு ஓட்டளிக்கிறார்?
3. எத்தனை Popular பதிவுகளுக்கு , அப்பதிவு Upcoming பகுதியில் இருக்கும் போதே வாக்களிக்கிறார்.
4. அவர் பதிவை படித்து விட்டுதான் ஓட்டு அளிக்கிறாரா? அல்லது மொத்தமாக அனைத்து     பதிவுகளுக்கும் ஓட்டு அளிக்கிறாரா?
5. அடுத்தவரால் Positive ஓட்டளிக்கபடும் Comment அளிப்பவரா?
…………………………………………

இதுபோன்று இன்னும்  பல காரணிகளால் வாசகரின் மதிப்பு நிர்ணயிக்கபடுகிறது.  இதனை தொடர்ந்து  மேம்படுத்தி வருகிறோம்.

புதிதாக வரும் வாசகரின் செயல்பாடுகளை பொறுத்து அவர் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்லும். இது ஒரு Automatic செயல்பாடு.  வாசகர்கள் மதிபெண்கள் என்ன என்பதை   நடை முறை சிக்கல்களை நினைவிற்கொண்டு தெரிவிக்க இயலாது. இது ஒரு தானியங்கி செயல்பாடு. தினசரி மாறுபடும்.

மதிப்புமிக்க வாசகர்கள் இருவர் வாக்குகள் (2 Votes) ஒரு பதிவை Popular  ஆக்கலாம். தமிழிஷில் ஈடுபாடு / மதிப்பு குறைந்த  வாசகர்களின் 40 வாக்குகள் ஒரு பதிவை Popular ஆக்க தேவைப்படலாம்.

தமிழிஷில் உறுப்பினரின் ஈடுபாடு, செயல்பாடு கொண்டே அவரின் ஓட்டு மதிப்பு நிர்ணயிக்கபடுகிறதே அன்றி வேறில்லை.

இதனால்தான் 3 ஓட்டுகள் பெற்ற சில பதிவுகள் Popular பகுதியில் தோன்றுகிறது. 10 ஓட்டுகள் பெற்றாலும் சில பதிவுகள் Upcoming பகுதியிலேயே நீடிக்கிறது.

கேள்வி  : எனது பதிவை திடீரென காணவில்லை? எனது உறுப்பினர் கணக்கு முடக்கப்பட்டு விட்டது.. ஏன்?

காரணங்கள்

1. பதிவானது பெரும்பாலான தமிழிஷ் வாசகர்களால் Bury செய்யப்பட்டு நீக்க பட்டிருக்கலாம்.

2. எந்த ஒரு சேவையிலும் இருக்கிற தொழில்நுட்ப ஓட்டைகளை கண்டறிந்து அதன் மூலம் அந்த சேவையை தவறாக உபயோகிப்பது மனித இயல்பு.  சிலர் பல உறுப்பினர் கணக்குகளை உருவாக்கி பதிவுகளை Popular ஆக்கும் நோக்கத்தில் ஓட்டளிக்கின்றனர். மற்றும் பல தவறான முறைகளை பின்பற்றி தவறான ஓட்டு அளிக்க முற்படுகின்றனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து ஓட்டுகளும் தானியங்கியாக பரிசீலிக்கப்பட்டு , தவறான ஓட்டுகள் நீக்க படுகின்றன. தவறான  உறுப்பினர் கணக்குகள் தானாகவே முடக்க படுகின்றன. பதிவும் தானாகவே நீக்க படுகின்றன. தொடர்ந்து இது போன்று செயல்படும் பதிவுகள் நிரந்தரமாக தமிழிஷில் இணைக்க முடியாதபடி முடக்கப்படும்.

கேள்வி : என்னுடைய பதிவை ஒப்பிடுகையில் தரமில்லாத பதிவுகள்  Popular ஆகி உள்ளன… Popular ஆகாத காரணத்தால் என்னுடைய பதிவு மோசமானதா?

அதற்கு அப்படி அர்த்தம் இல்லை. உங்கள் பதிவிற்கு ஏற்ற வாசகர் வட்டம் தமிழிஷில் இல்லை என்பதே பொருள். தமிழிஷ் வாசகர்கள் மாற்று ரசனை கொண்டவர்களாக உள்ளார்கள் என கொள்ளலாம். தமிழிஷை பதிவுகளை எடை போடும் தளமாக எடுத்து கொள்ள வேண்டாம். வாசகர்களின் ரசனை படி தெரிவு செய்யும் தளமாக கொள்ளுங்கள்.

தமிழிஷை சுவாரசியமான தளமாக கொண்டு செல்லவே இந்த கட்டுபாடுகள் உள்ளன என்பதை புரிந்து கொள்வீர்கள்  என்று நம்புகிறோம்.

எங்களது கோரிக்கை இதுதான். பதிவுகளை வாசியுங்கள். கவர்ந்த பதிவுகளுக்கு ஓட்டளியுங்கள்.  தயவு செய்து தவறான அணுகுமுறையில் இருந்து விலகியே இருங்கள். தமிழிஷை அனைவருக்கு விருப்பமான தளமாக கொண்டு செல்ல உதவுங்கள்.

நன்றி

மேலும் சந்தேகங்கள் இருந்தால் support@tamilish.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.

| icon1 admin | icon2 Uncategorized | icon4 08 4th, 2009| icon3Comments Off

தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம். ஒவ்வொரு செய்தியும் உங்களைப் போன்ற பார்வையளர்கள் இங்கு பகிர்ந்து கொண்டவை தான். இங்கு பதிவு செய்யப்படும் ஒவ்வொரு செய்தியும் பார்வையாளர்களால் ஓட்டளிக்கப்பட்டு, குறிப்பிட்ட ஓட்டுகள் பெற்றபின் முதல் பக்கத்தை (Popular) அடைகின்றன.

பங்களிப்பு : செய்திகள் சம்பந்தமான உங்களது கருத்துக்களை பின்னூட்டம் (comments) மூலமாக வெளிப்படுத்துங்கள். ““, “” மூலமாக அடுத்தவர் பின்னூட்டங்களை (comments) மதிப்பிடுங்கள். மேலும் பங்களிக்க, இணையத்தில் சுவரஸ்யமான செய்தியை கண்டுபிடித்து இங்கு submit செய்யுங்கள். அவை உடனடியாக, பார்வையாளர்கள் ஓட்டிட வசதியாக Upcoming பகுதியில் பட்டியலிடப்படும். .

தமிழிஷ் என்ன சிறப்பு ?

1. தமிழில் வாசிக்க, நிகழ்வுகள் பற்றி பலதரப்பட்டோரின் எண்ணங்களை தெரிந்துகொள்ள.

2. இணையத்தில் பரவியுள்ள தமிழ் பக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சி. இங்குள்ள ஒவ்வொரு செய்தியும் உங்களைப் போன்ற ஒருவர் பகிர்ந்து கொண்டதுதான். இணையத்தில் நீங்கள் உலாவும் போது நீங்கள் காணும் தமிழ் பக்கங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் படித்து ரசித்ததை அனைவரும் ரசிக்கலாமே. நீங்கள் அனவருக்கும் தெரிவிக்க விரும்பும் செய்தி உள்ள பக்கங்களை இங்கே பகிரலாம்.

3. இங்கே நீங்கள் தான் மஹாராஜா, எடிட்டர் எல்லாம். வாசகர்கள் பகிரும் அனைத்து பக்கங்களும், “Upcoming” பகுதியில் பட்டியலிடப்படும். நல்ல/சுவையான செய்திகளும் இருக்கலாம். சில குப்பை செய்திகளும் இருக்கலாம். அதை ஒழுங்குபடுத்தும் சுவையான பொறுப்பு உங்களை சார்ந்தது. நீங்கள் காணும் செய்தி ஆஹா! அட்டகாசம்!! என்றால் “Vote” கிளிக் செய்து உங்கள் ஆதரவை அந்த பதிவிற்கு [இணைய பக்கம்] தெரிவியுங்கள். அந்த செய்தி குப்பை என்று நீங்கள் கருதினால் “Bury” கிளிக் செய்யுங்கள்.

4. அதிக நபர்களால் “Vote” அளிக்கப்படும் பக்கங்கள், குறிப்பிடப்பட்ட ஓட்டுகள் பெற்ற பின்பு Popular பக்கங்களாக உடனடியாக முன்னேற்றம் கண்டு முதல் பக்கத்தில் பட்டியலிடப்படும். அதிக அளவு “Bury” செய்யப்பட்ட பக்கங்கள் tamilish பட்டியலில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும்.
[குறிப்பு : இந்த ஓட்டுகளின் எண்ணிக்கை, மதிப்பு ஒவ்வொரு பிரிவை பொறுத்து மாறுபடும். எடுத்துகாட்டாக சில பிரிவுகளில் உள்ள பக்கங்கள் மூன்று ஓட்டுகளில் Popular ஆகலாம். சில பிரிவுகளில் உள்ள பக்கங்கள் Popular ஆக பத்து ஓட்டுகள் தேவைப்படலாம்.

5. இணைய பக்கங்களை Bookmarking செய்துகொள்ளவும் நீங்கள் tamilish -ஐ உபயோக படுத்தலாம்.
Bookmarking என்றால் என்ன? குறித்து கொள்ளுதல். நாம் சிலவிசயங்கள் மறக்க கூடாது என்பதற்காக ஒரு சிட்டை/டைரியில் குறிப்பெடுத்து கொள்வதில்லையா? அது போலதான் இதுவும். நீங்கள் நாள்தோறும் நூற்றுகணக்கான பக்கங்களை இணையத்தில் காண்பீர்கள். சில பக்கங்களை நியாபகம்/சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். அதை நீங்கள் tamilish- ல் செய்யலாம்.
நீங்கள் சேமிக்க நினைக்கும் பக்கங்களை tamilish- ல் பகிர்ந்து சேமித்து வைத்து கொள்ளலாம். அடுத்தவர் பகிரும் பக்கங்களையும் சேமித்து கொள்ளலாம்.

6. நம்முடைய கருத்தை நமக்குள் வைத்து கொள்ளாமல், நாலு பேர் காதுகளில் போடுவது நல்ல விஷயம் தானே. அதற்கும் வாய்ப்பளிக்கிறது , Tamilish. இங்கு பட்டியலிடப்பட்டுள்ள செய்திகள் பற்றி உங்களுக்கு ஆதரவு / எதிர்ப்பு கருத்துகள் இருக்கலாம். அதை Comments ஆக வெளிப்படுத்துங்கள். சாதி/மத துவேஷ கருத்துகளையும், தனி மனித தாக்குதல் கருத்துகளையும் தவிருங்கள். எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில்
உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும். பயனுள்ள வகையில் விமர்சனம் செய்யுங்கள். அடுத்தவர் கருத்துகளை மதிப்பிட ஓட்டு வசதியும் Comments பகுதியில் உண்டு.

7. நீங்கள் எழுத்தாளரா? வலைப்பூ (Blog) வைத்துள்ளீர்களா? இணையத்தளம் வைத்துள்ளீர்களா? உங்களது சுவையான பக்கங்களை tamilish வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அது உங்களுக்கும் tamilish வாசகர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

8. உங்கள் ஒத்த கருத்துள்ள நண்பர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இங்கு கண்டு கொள்ளுங்கள்.

| icon1 admin | icon2 Uncategorized | icon4 08 4th, 2009| icon3Comments Off

உங்கள் பதிவுகளுக்கு, உங்கள் தளத்திலேயே, உங்கள் பார்வையாளர்களுக்கு ஓட்டளிக்கும் வாய்ப்பை புதிய வசதியாக வழங்குகிறோம்.இதன் மூலம் தமிழிஷ் வாசகர்கள் மட்டுமன்றி, உங்கள் தள பார்வையாளர்களும் உங்கள் பக்கங்களுக்காக வாக்களிக்க முடியும்.

Tamilish ஓட்டளிப்பு பட்டையை உங்கள் தளத்தில் இணைப்பது மிகவும் எளிது.

உதாரணத்திற்கு உங்கள் blogger.com பிளாக்குகளில் எப்படி இதனை இணைப்பது என்று பார்ப்போம். உங்கள் பிளாக் Dashboard -க்கு சென்று,  உங்கள் பிளாக்கின் Layout -ஐ கிளிக் செய்து, Edit HTML -ஐ கிளிக் செய்யவும். அதில் Expand Widget Templates செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து கொள்ளவும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

|

பின்பு அந்த HTML -இல் <data:post.body/> என்ற code -ஐ தேடவும். அதற்கு கீழாக கீழே உள்ள Code-ஐ சேர்க்கவும். படத்தை பார்க்கவும்

|

சேர்க்க வேண்டிய Code (Copy & Paste)

Horizontal Button என்றால்

<script type='text/javascript'>
button="hori";
submit_url ="<data:post.url/>"
</script>
<script src='http://www.tamilish.com/tools/voteb.php' type='text/javascript'></script>

பின்பு Save Template கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான். இனி உங்களது ஒவ்வொரு பதிவுகளிலும் Tamilish ஓட்டளிப்பு பட்டை தெரியும்.

Wordpress பிளாக்குகளுக்கான ஓட்டளிப்பு பட்டை வழிமுறைகள் விரைவில் வெளியிடுகிறோம்.

மேலும் சந்தேகங்கள் இருந்தால் support@tamilish.com  என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.

| icon1 admin | icon2 Uncategorized | icon4 08 4th, 2009| icon3Comments Off

தமிழிஷுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பை / முன்னேற்றத்தை வழங்கியுள்ள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். Tamilish.com பற்றிய அறிவிப்புகள், சேவைகள் பற்றிய உதவி பக்கங்கள் இங்கு இடம்பெறும்.

சந்தேகங்கள் இருந்தால்  support@tamilish.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.

| icon1 admin | icon2 Uncategorized | icon4 08 4th, 2009| icon31 Comment »